சமகால நிகழ்வுகள் எம்மை மனதளவில் எந்தளவு பாதித்திருக்கிறது என்பது இந்த பாடல் தரும் ஆறுதலின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
நயந்தாராவின் நெற்றிக்கண் திரைப்படத்திற்காக சித் ஶ்ரீராம் குரலில் ஒலிக்கிறது இந்த பாடல். கார்த்திக் நெத்தாவின் வரிகள் யதார்த்தமாக மனதிற்குள் இறங்கி எழுகிறது. இந்த நெருக்கடியான காலப்பகுதியில் தம்மை அர்ப்பணித்து முழுநேர பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள், மருத்துவர்கள், மற்றும் சுகாதார பணியாளர்கள் என தவிர்க்கமுடியாதவர்களை கௌரவித்து இப்பாடலை அவர்களுக்காக சமர்ப்பித்துள்ளனர்.
Comments powered by CComment