கட்டுரைகள்

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

சுவிற்சர்லாந்தில், நேரடி ஜனநாயகத்தின் மீதான மதிப்பில் நாட்டின் நம்பிக்கையை, மக்களின் விருப்பத்தினை நிரூபிக்கும் முக்கிய முறைகளில் ஒன்றாக வாக்கெடுப்புகள் கருதப்படுகின்றன. வாக்குப்பெட்டியில் வாக்காளர்கள் வாக்களிப்பதன் மூலம் சில பாராளுமன்ற முடிவுகளை நிர்ணயிக்க அல்லது மாற்றியமைக்க வாக்கெடுப்பு அனுமதிக்கிறது. சுவிஸ் மக்கள் ஆண்டுக்கு நான்கு முறை பொது வாக்கெடுப்புகளில் வாக்களிக்கின்றனர். இதன் மூலம் சுமார் 15 மத்திய அரசின் கூட்டாட்சி திட்டங்களில் வாக்களிப்பின் மூலம் பங்கேற்கின்றனர்.

சுவிற்சர்லாந்தில் பல ஆண்டுகளுக்கு முன் செல்வாக்கற்ற அரசியலமைப்புகளால் உள்நாட்டு மோதல்கள் ஏற்பட்டன. சுவிற்சர்லாந்தின் ஐந்தாவது அரசியலமைப்பு; மக்களிடம் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், 1802 இல் சுவிற்சர்லாந்தின் முதல் வாக்கெடுப்பை அரசாங்கம் வழிநடத்தியது.

1802 அரசியலமைப்பு ஒரு ஒற்றையாட்சிக்கு சாதகமாக இருந்தபோதிலும், இந்த முடிவு நியாயமற்றதாகக் கருதப்பட்ட நிலையில், பொது மக்கள் வாக்கெடுப்பு, 1803 பிப்ரவரி 19 ஆம் தேதி மத்தியஸ்த சட்டத்தை உருவாக்க அரசாங்கத்தை வலியுறுத்தியது. இது ஒரு புதிய கூட்டாட்சி அமைப்பில், மாநிலங்களின் இறையாண்மையை மீட்டெடுக்கும் இன்றைய அரசியலமைப்பின் தோற்றமாக அமைந்தது.

சுவிஸ் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பெரும்பாலான சட்டங்கள் மக்கள் வாக்களிக்கக் கேட்காமல் இன்று நடைமுறைக்கு வருகின்றன. ஆனால் வாக்கெடுப்பு நடத்தபட இரண்டு காரணங்கள் உள்ளன:

1. விருப்ப வாக்கெடுப்பு

சுவிஸ் பாராளுமன்றத்தின் முடிவை குடிமக்கள் ஏற்காதபோது, ​​அவர்கள் சட்டத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட 100 நாட்களுக்குள் 50,000 செல்லுபடியாகும் கையொப்பங்களுடன் முறையிடும் போது, ​​அல்லது எட்டு மாநிலங்கள் ஒரு கோரிக்கையை சமர்ப்பிக்கும் போது, ​​ அந்த சட்டம் ஒரு வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அதில் குடிமக்கள் விருப்ப வாக்கெடுப்பில் பங்கேற்கிறார்கள். இதனால் பெரும்பான்மையான வாக்காளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே இந்த சட்டம் நடைமுறைக்கு வருகிறது.

2. கட்டாய வாக்கெடுப்பு

மத்திய அரசியலமைப்பின் திருத்தங்கள் உட்பட சுவிஸ் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சில சட்டங்கள், தேசிய வாக்கெடுப்புக்கு மாநிலங்களில் வைக்கப்பட வேண்டும். மத்திய அரசியலமைப்பின் திருத்தங்கள் பெரும்பான்மையான வாக்காளர்கள் மற்றும் மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே அவை நடைமுறைக்கு வரும்.

மத்திய கூட்டாட்சி அரசின் வாக்கெடுப்புகளைத் தவிர, கன்டோமாநில அரசுகளின் வாக்கெடுப்புகளும் உள்ளன. இந்த வாக்கெடுப்புகள் பரந்த அளவிலான விஷயங்களில் நடத்தப்படலாம். மேலும் இந்த வகை வாக்கெடுப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்து ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதிகள் உள்ளன.

யார் வாக்களிக்க முடியும்?

18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து சுவிஸ் குடிமக்களும் வெளிநாட்டில் வசிப்பதாக பதிவுசெய்யப்பட்ட சுவிஸ் குடிமக்கள் உட்பட வாக்களிக்க முடியும். மக்கள் வாக்களிக்க மூன்று வழிகள் உள்ளன . அஞ்சல் வாக்களிப்பு , வாக்குப் பெட்டியில், மற்றும், சில மாநிலங்களில், மின்னணு முறையில் மின்-வாக்களிப்பு.

தபால் வாக்களிப்புக்காக , வாக்கெடுப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் உறைகள் மக்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வாக்குச் சீட்டுகள் மற்றும் தொடர்புடைய அனைத்து சட்டங்களுடனும் (அல்லது முன்மொழியப்பட்ட சட்டம்) கையேடுகள் மற்றும் ஒவ்வொன்றிற்கும் ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் பற்றிய ஒரு சுருக்கம் ஆகியவை அனுப்பி வைக்கப்படும். இந்த கையேட்டில் வாக்காளர்கள் முன்மொழிவுகளை ஏற்க வேண்டுமா அல்லது நிராகரிக்க வேண்டுமா என்பது குறித்து மத்திய அரசின் பரிந்துரைகளும் உள்ளன.

செப்டெம்பர் 27ல் நடைபெறவுள்ள பொது மக்கள் வாக்கெடுப்பில், ஐந்து திட்டங்களுக்கான மக்கள் அபிப்பிராயங்கள் கோரப்படுகின்றன.
1.இடப்பெயர்வு வரம்பு முயற்சி
2.தந்தைவழி பிரசவகால விடுப்பு முயற்சி
3.இராணுவச் செலவீனங்கள் அதிகரிப்பு
4.குழந்தை பராமரிப்புக்காக வரி விலக்குகளை அதிகரிப்பு
5.விலங்குகள் வேட்டையாடுவதை கட்டுப்படுத்தல் - என்பது குறித்த ஐந்து திட்டங்களுக்கான சட்ட வரைபுகளுக்காக மக்கள் கருத்துக்கள் கோரப்படுகின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.