தொழில்நுட்பம்

இணைய வர்த்தகத்தில் உலக அளவில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனம் அமேசன். இந்தியாவுக்கான அதன் கிளை நிறுவனம் அமேசான் இந்தியா என்று அழைக்கப்படுகிறது.

இந்நிறுவனம், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் இணைய வாணிப அனுபவத்தை சிறப்பானதாக வாடிக்கையாளர்கள் உணரும் விதத்தில், தனது புதிய ‘வாடிக்கையாளர் சேவை மையங்களை’ இந்தியாவின் ஹைதராபாத், கோவை, புனே, நொய்டா, கொல்கத்தா, ஜெய்ப்பூர், சண்டிகர், மங்களூரு, இந்தூர், போபால், லக்னோ ஆகிய நகரங்களில் தொடங்குகிறது.

இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள அமேசான் இந்தியா நிறுவனம், இந்தப் பணியின் இயல்பு என்பது பெரும்பாலும் வாடிக்கையாளர்களுடன் காணொலி மூலம், கணினி மூலம் உரையாடுவதாக இருப்பதால் வீட்டிலிருந்தே பணிபுரிலாம் என தெரிவித்துள்ளது. அமேசன் நடத்தும் இணைய நேர்காணலில் வெற்றிபெற்றால் உடன் வேலையில் இணைய பணி ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.

‘Virtual Customer service Associate’ என அழைக்கப்படும் இந்த பணியானது வாடிக்கையாளர்களுக்கு இமெயில் மூலம் உதவுவது, சாட்டிங் மூலம் கேள்விகளுக்கு பதில் அளிப்பது, சமூக ஊடகங்கள், தொலைப்பேசி வாயிலாக பதில் அளித்தல், வாடிக்கையாளர்களுடன் உரையாடுதல் போன்றவற்றைக் கவனிக்கும் ஒன்றாக இருக்கும் என அமேசான் தெரிவித்துள்ளது.

இந்த 20 ஆயிரம் பணியிடங்களுக்கும் குறைந்தபட்ச கல்வித்தகுதி என்பது 12-ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதுமானது. தமிழ், ஆங்கிலம், இந்தி,தெலுங்கு, அல்லது கன்னடம் நன்றாகப் பேசத்தெரிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக பணிக்கு எடுக்கப்படும் ஊழியர்களின் செயல்பாடு, பணித்திறன் ஆகியவற்றை ஆய்வு செய்து தற்காலிக ஊழியர்கள் தேவைக்கு ஏற்ப நிரந்தர ஊழியர்களாக மாற்றம் செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து அமேசான் இந்தியா வாடிக்கையாளர் சேவையின் இயக்குநர் அக்சய் பிரபு கூறும்போது “அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப, வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு‘Virtual Customer service Associate’ பணியில் திறமையான இளைஞர்களை அமர்த்தி வருகிறோம். கோவிட் 19 காரணமாக அடுத்து வரும் ஆறு மாதங்களில் வாடிக்கையாளர்களின் வருகை எங்கள் இணையத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் புதிதாக 20 ஆயிரம் இந்திய இளைஞர்களை இந்தியா சார்ந்த பணிகளுக்கு வேலைக்கு எடுக்க இருக்கிறோம். இப்போது இருக்கும் நெருக்கடியான கரோனா காலத்தில் உறுதியான வேலையும், வாழ்வாதாரத்தையும் அமேசான் வழங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்தார் நமீதா.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும் விஜய் சேதுபதி காணும் பொங்லான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய செய்தியை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.