இந்தியா

 டெல்லியில் இன்று இந்தியா- அமெரிக்கா இருநாடுகளுக்கிடையிலான '2 பிளஸ் 2' பேச்சுவார்த்தை நடக்கிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அமெரிக்க - இந்திய இரு நாட்டு உறவு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இரண்டுக்கு இரண்டு (2 பிளஸ் 2) எனும் பேச்சுவார்த்தை ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இது இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகளால் நடாத்தப்படுகிறது.

அவ்வகையில் டெல்லியில் இன்று 2020ஆம் ஆண்டிற்கான '2 பிளஸ் 2" பேச்சுவார்த்தை நிகழ்த்தப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள நேற்று டெல்லிக்கு; அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி மார்க் எஸ்பர் ஆகியோர் வந்தடைந்தனர்.

இவர்களுடன் இந்திய மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் மற்றும் இந்திய-சீனா எல்லைப்பிரச்சனைகள் மத்தியில் இந்த பேச்சுவார்த்தை நடப்பதால் பெறும் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தகவல் பகிர்வு, ராணுவ தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு வர்த்தகம் தொடர்பாகவும் சீனாவுடனான எல்லை பதற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.