இந்தியா

இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலை பீகார் மாநில சட்டப்பேரவையின் 243 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. அக்டோபர் 28 ஆன இன்றும், தொடர்ந்து நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய திகதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான முடிவுகள் நவம்பர் 10 ஆம் திகதி வெளியிடப்படுகின்றன.

மொத்தம் 1,066 வேட்பாளர்களில் 114 பெண்கள் உட்பட இத் தேர்தலில் போட்டியிடுவதோடு 71 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்கு பதிவில் முக்கிய அமைச்சரவையின் அரசியல் எதிர்காலம் அடங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மத்திய அரசு இத்தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளில் 30 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களை குவித்துள்ளது.

மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து மக்கள் தங்கள் வாக்குபதிவுகளை செயல்படுத்திவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.