இந்தியா

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அண்மையில் பிரான்ஸ் நாட்டில் பள்ளி வகுப்பறை ஒன்றில் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் ஒருவர் விவாதம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடந்த 16ஆம் திகதி அந்த ஆசிரியர் சிரச்சேதம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.

பிரான்சில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அன்றே காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை சார்பில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கையில் ஒரு பிரெஞ்சு ஆசிரியரின் உயிர் கொடூரமான முறையில் பறிக்கப்பட்டதையும் பயங்கரவாத தாக்குதலையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். குறித்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கும் பிரான்ஸ் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பயங்கரவாத செயல் எந்தவொரு காரணத்திற்காகவும் எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கொல்லப்பட்ட ஆசிரியரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்றிருந்தார்.

இதன் தொடர்பாக மற்றுமொர் சம்பவத்தில் பத்திரிகை ஒன்றில் வெளியான துருக்கி அதிபர் தாயூப் எர்டோகனை விமர்சிக்கும் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து  துருக்கி அதிபர் தனது கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.  மேலும் பிரான்ஸ் அதிபருக்கு எதிராக துருக்கியில் போராட்டங்கள் நடைபெற்றதும் குறிப்பிடதக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.