இந்தியா

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்துவருகிறது. அதோடு புதிய தொற்றுக்களின் விகிதமும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இதனிடையே இந்தியாவில் புதிதாக 38,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது கடந்த 24 மணி நேரத்தில் பதிவான எண்ணிக்கையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 89,12,908 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 474 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் இந்தியாவில் 44,739பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 83,35,110 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வருவபவர்களின் எண்ணிக்கை 4,46,805 ஆகவும் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.