இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.
அண்மையில் நிவர் புயல் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கரைகடந்தது, இதனையடுத்து தற்போது புதிய புயல் உருவாகிவருவதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 530கிமீ தொலைவில் உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'புரெவி' என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் நாளை மாலை அல்லது இரவில் இலங்கையிலிருந்து கரையை கடந்து தென் தமிழகம் கேரளாவில் அதீத கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உருவாகும் வங்கக்கடலின் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் கரை திரும்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.