இந்தியா

கொரோனா மேலாண்மைக்கான கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கவுள்ளது, இதில் பாகிஸ்தான் உள்ளிட்ட 9 அண்டைநாடுகள் பங்கேற்க உள்ளன.

இன்று நடைபெறப்போகும் கொரோனா மேலாண்மை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். கொரோனா தொடர்பான அனுபவம், நல்ல பழக்கம், மற்றும் முன்னெடுப்பு நடவடிக்கைகள் என்ற தலைப்பில் அவர் உரையாற்றுகிறார். இதில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், மொரீசியஸ், நேபாளம், பாகிஸ்தான், செசல்ஸ் மற்றும் இலங்கை ஆகிய 9 நாடுகள் கலந்துகொள்ளவுள்ளது குறிப்பிடதக்கது. அந்தெந்த நாடுகளின் சுகாதார செயலாளர் மற்றும் கொரோனா மேலாண்மைக்கான தொழில் நுட்ப குழு தலைவர் என பங்கேற்க உள்ளனர்,

இதனிடையே கொரோனா தடுப்புமருந்து குறித்து பேசிய மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி இதுநாள் வரையில் மொத்தம் 2.29 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் சர்வதேச சமூகத்திற்கு விநியோகப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்தியாவின் தடுப்பு மருந்துகள் மேற்கத்திய நாடுகளான ஆப்பிரிக்கா லத்தீன் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கும் வருங்காலத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, நேரடி வகுப்புகளாக இல்லாமல், இணையவழிக் கல்வி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதராக மூத்த தூதரக அதிகாரியும், கருப்பினத்தைச் சேர்ந்தவருமான 68 வயதாகும் லிண்டா தோமஸ் கிரீன்பீல்டு என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடென் நியமித்துள்ளார்.

கடந்த சில தசாப்தங்களில் இல்லாதவாறு இஸ்ரேல் அரசானது ஒரு பாரிய இரகசிய அணுவாயுத செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக AP ஊடகம் செய்மதிப் புகைப் படங்களது ஆதாரத்தை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.