தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட ஊரடங்கை மீறிய பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துளளார்.
தமிழகம் முழுவதும் இவ்வாறு பதியப்பெற்ற சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் இவ்வாறு ரத்து செய்யப்படும்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், அங்கு மேலும் பேசுகையில், மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போரோடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும். மேலும் கொரோனா கால விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகளும் விலக்கப்படும். இதுவரை பதிவான 1,500 வழக்குகளில், இ-பாஸ் முறைகேடு, கவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது, வன்முறையில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளை தவிர மற்றவை ரத்து செய்யப்படும் எனவும் கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் இவ்வாறு திரும்பப் பெறக் கூடும் எனவும், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வது குறித்துப் பரிசீலனை செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.