இந்தியா

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

அதை, கொரோனா பெருந்தொற்று உலகையே உலுக்கத் தொடங்கியிருந்த கடந்த ஆண்டு ஏப்ரலில் சீனா மீறியதாக இந்தியா குற்றம் சாட்டியது. அதாவது கடந்த ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் லடாக் எல்லையில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில், சீனத் துருப்புக்கள் மற்றும் கனரக லாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது பதற்றம் தொடங்கியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. பின்னர் அது இரு நாடுகளின் எல்லைகளில் பின்னர் இரு நாடுகளுமே துருப்புகளைக் குவித்தது நினைவிருக்கலாம்.

இயந்திரங்கள் மற்றும் கச்சாப் பொருட்கள்

இந்நிலையில் சீனாவுடனான எல்லை பிரச்சனைக்குப் பிறகு, அந்நாட்டுடனான வர்த்தக உறவைக் குறைத்து கொள்ள இந்தியா தொடந்து முயன்று வந்தாலும், அந்நாட்டில் இருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்வதால், இந்தியாவுடன் வர்த்தம் செய்யும் நாடுகளில், தொடர்ந்து சீனா முதலிடத்தில் இருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சீனாவிலிருந்து பல தொழில்களுக்கான கச்சாப்பொருட்களை இறக்குமதி செய்வதிலும் இந்தியா முனைப்பு காட்டுகிறது.
இந்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியா- சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட இருவழி வர்த்தகத்தின் மதிப்பு கடந்த ஆண்டில் 7,770 கோடி அமெரிக்க டாலராக இருப்பதாக ப்ளூம்பெர்க் இணையதளம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டான 8,550 கோடி அமெரிக்க டாலரை விடக் குறைவாக இருந்தாலும், அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்ட வர்த்தகமான 7,590 கோடி அமெரிக்க டாலர்களை விட அதிகமாக இருப்பதால், சீனா முதலிடத்தில் இருக்கிறது, என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

சீனாவுடனா எல்லைப்பிரச்னைக்கு பிறகு, மோடி தலைமையிலான மத்திய அரசு 100க்கும் மேற்ப்பட்ட சீன செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது. சீனாவில் இருந்து வரும் முதலீடுகளுக்கு வழங்கும் ஒப்புதல்களை குறைத்த போதிலும், சீனாவில் தயாரிக்கப்படும் கனரக இயந்திரங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், கச்சாப்பொருட்கள், வீட்டு உபகரணங்கள் ஆகிவற்றின் இறுக்குமதியால் மட்டும், 2020 ஆம் ஆண்டில் 4,000 கோடி அமெரிக்க டாலர்கள் வர்த்தகம் நடைபெற்று இருப்பதாக, ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மொத்த இறக்குமதியின் மதிப்பு, 5, 870 கோடி அமெரிக்க டாலர்களாக இருப்பதாகவும், இது அடுத்த இரண்டு இடங்களில் இருக்கும் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியின் கூட்டுத்தொகையை விட அதிகம் என ப்ளூம்பெர்க் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து செய்யப்பட்ட இறக்குமதியில் 51 விழுக்காடு கனரக வாகனங்கள் என்றும், சீனாவுடனா இறக்குமதி மட்டுமல்லாமல் ஏற்றுமதியும் 11 விழுக்காட்டிற்கு அதிகரித்திருப்பாதவும், அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தற்சார்பு திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட துறைகளில் புதிய திறன்களை உருவாக்க, குறைந்தது நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும். அதுவரை சீனாவை இந்தியா நம்பியிருப்பது தொடரும்” எனச் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டுத்துறையை சேர்ந்த பொருளாதார நிபுணர் அமிதேண்டு பாலித் தெரிவித்திருப்பதாக ப்ளூம்பெர்க் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.