இந்தியா

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராகத் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை உருவாக்குவதற்கு அச்சாணியாகத் திகழ்ந்தவர் தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த அஞ்சலிக் குறிப்பில், ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாகக் குரல். கொடுத்தவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவராகவும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராகவும் திகழ்ந்த தா. பாண்டியன் அவர்கள் 26.02.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கின்றது.

தமிழகத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவராக, சிறந்த பொதுவுடமைக் கருத்தியல் சிந்தனையாளராக, தமிழின உணர்வாளராக, சிறந்த பேச்சாளராக, வலிமையாக தன் வாதத்தை மக்களிற்காக முன்வைத்து வாழ்ந்தவர்.

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராகத் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை உருவாக்குவதற்கு அச்சாணியாகத் திகழ்ந்தவர்.

2008ஆம் ஆண்டிற்குப்பின் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக் காலங்களில்> தமிழகத்தின் பலகட்சித் தலைவர்களையும் இணைத்துப்> பல போராட்டங்கள் ஊடாக இந்திய அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் நெறிப்படுத்தி> ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாக குரல்கொடுத்துப் பலமாகப் போராடிய பொதுவுடமைச் சிந்தனையாளர்.

ஈழத்தமிழர்களிற்காக 2012ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடாத்தப்பட்ட அனைத்துலக ஈழத்தமிழர் மகாநாட்டில் கலந்துகொண்டு “ஈழத்தமிழர்களிற்கு இடம்பெற்றது இன அழிப்பு!” என்று ஆதாரங்களோடு எடுத்துக்கூறி, மனித உரிமைக்காகவும் மக்கள் விடுதலைக்காகவும்; போராடியவர்.

ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்தவரும் ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடும் இனங்களிடமும் தமிழின அழிப்பை எடுத்துச்சென்றவருமான தா.பாண்டியன் ஐயா அவர்களின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. இவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களின் பிரிவுத்துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.