இந்தியா

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6-ந் திக தி தேர்தல் நடப்பதாக அறிவிக்கபட்டுள்ள நிலையில், தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சிகள், கூட்டணிகள் அமைப்பதிலும், ஆர்வம் கொள்ளத் தொடங்கியுள்ளன.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இநத் கூட்டணியை அமைப்பதில், கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்தும் தேர்தல் அறிக்கை தொடர்பாகவும் , அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளார்கள்.

இதுவரையில் பா.ம.க. கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. முலம் பா.ஜனதா, தே.மு.தி.க., த.மா.கா. மற்றும் சிறு, சிறு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுவது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகளை உறுதி செய்துவிட்டு, விரைவில் தமது கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. தீவிரமாகவுள்ளது. இதற்காக அ.தி.மு.க.வில் தற்போது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. பெறப்படும் விருப்ப மனுக்களிலிருந்து நேர்காணல் நடத்தி வரும் 8 ந் திகதி தமது கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பா.ஜ.கட்சிக்கான தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள்.

அப்போது பா.ஜனதா தேர்வு செய்து வைத்திருந்த 60 தொகுதிகள் பெயர் பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கி உள்ளார்கள். அதில் இருந்து தொகுதிகளை பகிர்ந்து கொள்ளும்படி அமித்ஷா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது தவிர, கள நிலவரம், அ.தி.மு.க. கூட்டணியை வலுப்படுத்துவது, தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விசயங்கள் குறித்து அமித்ஷாவுடன், அ.தி.மு.வினர் ஆலோசித்திருக்கிறார்கள்.
நேற்று மாலை மீண்டும் இருதரப்பிலும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு 22 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதால், அதைவிட அதிகமான தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு வழங்க வேண்டும் என்று தே.மு.தி.க தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் செல்வாக்குள்ள தமது கட்சிக்கு அதிக தொகுதிகள் கோரியுள்ள தே.மு.தி.கவினருக்கு, கூட்டணியில் 14 இடங்கள் மட்டுமே தரமுடியும் என அ.தி.மு.க தெரிவித்துள்ள நிலையில் இழுபறியாக உள்ளது. இந்நிலையில் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடரவுள்ளன.

இது இவ்வாறிருக்க 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் என்பவற்றில் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும், காங்கிரஸ் தொண்டர்களிடமிருந்து விருப்ப மனு கோரப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் இதற்கான இறுதி நாள் மார்ச் 5ந் திகதியென அறிவிக்கபட்டிருக்கிறது. விருப்ப மனு அளித்த அனைவரிடமும் மார்ச் 6 , 7ந் திகதிகளில் நேர்காணல் நடைபெற உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.