இந்தியா

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமான தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்று நடைபெறுகின்றன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறும் என அறியத் தரப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள் குறைவான பிரதேசங்களிலும், மலைப்பிரதேசங்களிலும், பிற்பகல் 3 மணிக்கும், மாலை 5ணிக்கும், வாக்களிப்புக்கள் நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தொடங்கிய வாக்குப்பதிவில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி வருகின்றனர்.

காலை 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.33% வாக்குப்பதிவும், குறைந்த பட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 20.98% வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் 23.67% வாக்குகள் பதிவாகியுள்ளன” என்றார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.