இந்தியா

இந்தியாவி தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வீரியமாகத் தாக்கிவருகிறது. நேற்று இரண்டாவது நாளாக வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியது. தொற்றுக் காரணமாக பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.

தமிழகத்திலலும் தொற்று வீதம் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா வைரஜ் தொற்றின் பரவு வீதம் நாளொன்றுக்கு பத்து சதவீதமாக உள்ளதாகவும், ஒரே நாளில் 7,819 பேர் புதிதாகத் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டில், வைரஸ் தொற்று அதிகமாக இருந்த காலத்தில் அதிகபட்சமாக 6,993 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கையையும் தாண்டி இரண்டாவது அலைத் தொற்று பரவி வருகிறது.

இந் நிலையில் பரவும் வைரஸ் தொற்றஜினைக் கட்டுப்படுத்த மேலும் பல கட்டுப்பாடுகளை தமிழகத்தில் விதிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், இன்று தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார துறை இணை இயக்குனர் செல்வ விநாயகம், வருவாய் துறை அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான மேலும் பல அவசர நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட போது, மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க யோசிக்கப்பட்டது. அவற்றில் தொற்றுப் பகுதிகளில் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகள் அமைத்து துல்லியமாக கண்காணிக்கவும், வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என்றும் ஆராயப்பட்டது. அத்துடன் வார இறுதி நாட்களில் ஊரடங்கும், வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும் கொண்டுவருவது குறித்தும் யோசிக்கப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.