இந்தியா

தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார்.

ஊசியை செலுத்தி கொண்ட பின்னர், 'எல்லோரும் கொரோனா தடுப்பு ஊசியை செலுத்திக்கொள்ள வேண்டும்' என்று அறிவுறுத்தினார்.

இந்நிலையில் நேற்று காலை திடீரென மாரடைப்பு காரணமாக, மோசமான நிலையில் வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு இடது ரத்த குழாயிலிருந்த அடைப்பு நீக்கப்பட்டது. தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரம் விவேக் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார், அவரது உடல் நிலை ஆபத்தான நிலையில் இருக்கிறது. ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும், தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும் தொடர்பு இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது

இந்நிலையில் இன்று அதிகாலை 4.55 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தனது சமூக அக்கறையுடன் கூடிய நகைச்சுவையால் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நகைச்சுவை நடிகர் விவேக். 1987ஆம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார் 200 க்கும் மேற்பட்ட படங்களில் இதுவரை நடித்திருக்கிறார்.

2009ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்றார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்று கொண்டிருந்த அவர், மாணவர்களைத் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சமூகப் பணியாற்றி வந்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.