இந்தியா

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,023 ஆகவும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கொரோனா பரிசோதனைகளும் அதிகளவில் நடத்தப்படுவதும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க ஒரு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 27 கோடியே 10 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்று ஒருநாளில் மட்டும் 16,39,357 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடமாநிலங்கள் பலவற்றிலும், மருத்துவத் தளவாடங்களின் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும் முப்படைகளின் உயர் அதிகாரிகளுடன் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று காணொலி காட்சி மூலம் நடத்திய ஆலோசனையின் போது, முப்படையினரும் நாடு முழுவதும் அரசு நிர்வாகங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும், கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள், கூடுதலாக தேவைப்படும் படுக்கைகள் உள்ளிட்ட பொருட்களை போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்னிறல், இந்தி மத்திய அரசின் மோசமான திட்டமிடலே நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட காரணம் என விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நிச்சயம் ஏற்படும் என மத்திய அரசு ஆய்விலேயே தெரியவந்திருக்கிறது. முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடையே 8 முதல் 9 மாதங்கள் கால இடைவெளி இருந்துள்ளது. அந்த இடைவெளிக்குள் முற் தயாரிப்புக்களைச் செய்யத் தவறிவிட்டீர்கள்.

உலகில் அதிக அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நாடுகளில் இந்தியா முதன்மையானதாக இருக்கும் போது ஏன் தட்டுப்பாடு ஏற்படுகிறது?. 2,000 லாரிகள் மட்டுமே நாட்டின் அனைத்து பகுதிக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. ஆக்சிஜன் நம்மிடம் உள்ளது. ஆனால், அது எங்கு தேவைப்படுகிறதோ அங்கு சென்று சேர முடியாத சூழல் உள்ளது மிகவும் துயரமான நிகழ்வாகும்.

கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மத்திய அரசு 6 கோடி கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அந்த நேரத்தில் 3 முதல் 4 கோடி இந்தியர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்?

இவ்வாறு பல விடயங்களிலும் மத்திய அரசின் மோசமான திட்டமிடலே நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட காரணம். எந்த வித திட்டமும் இல்லாதது தான் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை ஏற்பட காரணம். சரியான திட்டமிடல் இல்லாததே ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட காரணம். இவை மத்திய அரசின் திட்டமிடலின் தோல்வி எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.