இந்தியா

இந்தியா முழுவதும் கொரோனாவின் 2வது அலை தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த பத்து நாட்களில் இலட்சங்களில் அதிகரித்து வந்த தொற்று எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் நாலு இலட்சத்தைக் கடந்துள்ளது.

இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியின்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும், 4 லட்சத்து ஓராயிரத்து 993 பேர் கொரோனா புதிதாகத் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நாடாளவிய ரீதியில் கொரோணா காரணமாக 3,523 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,11,853 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமையால், தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் 1 கோடியே 56 லட்சத்து 84 ஆயிரத்து 406 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றின் புள்ளி விபரங்கள் கோடிகளில் இருக்கையில், தமிழக டாஸ்மாக் கடைகளின் நேற்று ஒருநாள் விற்பனையும், 292 கோடியென அறியவருகிறது. இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுற்ளதால், நேற்று கடைகளில் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் மொத்த வருமானம், நேற்று ஒரேநாளில் ரூ.292 கோடியென அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதனாலும், நாளை ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கினாலும், டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.