இந்தியா

தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டு காலத்தை ஆளப்போவது யார், என்கிற கேள்விக்கான பதில் இன்று ஞாயிற்றுக்கிழமை கிடைக்கவிருக்கின்றது. 

இன்று காலை 08.00 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பித்துள்ளன. காலை 09.00 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் தெரியவரும்.

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று இன்று மதியம் தெரிந்துவிடும். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 06ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.

தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், அதிமுக தலைமையில் பாஜ, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் என 5 அணிகள், தேர்தல் களத்தை சந்தித்தது. அதில் திமுக, அதிமுகவுக்கு மட்டுமே நேரடி போட்டி நிலவியது. 3வது இடத்தைப் பிடிக்கத்தான் மற்ற 3 கட்சிகளும் போட்டியிட்டன. மொத்தமுள்ள 234 தொகுதியிலும் 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் 4 கோடியே 57 இலட்சத்து 76 ஆயிரத்து 311 பேர் வாக்களித்தனர். 1 கோடியே 70 இலட்சத்து 93 ஆயிரத்து 644 பேர் வாக்களிக்கவில்லை. தமிழகத்தில் 72.81% மட்டும் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு முடிந்ததும், 88,937 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, துணை இராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள ஸ்டிராங் ரூமில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மற்றும் கட்சி முகவர்கள் கண்காணிப்பு என உச்சக்கட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை சரியாக காலை 08.00 மணிக்கு 75 மையங்களில் எண்ணப்படுகிறது.

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.