இந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸின் தொற்று 2வது அலை கடுமையாகத் தாக்கி வருகிறது. தொற்றின் முதல் அலையை விட அதிக வீச்சுடைய இதன் கடுமையான பாதிப்பு அடுத்தவாரத்தில் நிகழலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த பத்துத் தினங்களாக நாடு முழுவதும் தினசரி தொற்றின அளவு மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புக்கு குறித்து ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் குழு, மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பின் வளைவு உச்சத்தைத் தொடும் என எதிர்பார்ப்பதாக மத்திய அரசுக்கு அறித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.