இந்தியா

இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜனின் பற்றாக்குறை நிலவுவதான பொதுநல வழக்கின் சிறப்பு அமர்வில், இன்று நள்ளிரவுக்கு முன்னதாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

"அவசர நோக்கங்களுக்காக ஆக்சிஜனின் தொகுப்பை அடுத்த நான்கு நாட்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், மாநிலங்களுக்கு தற்போதுள்ள ஆக்சிஜன் விநியோகத்தை ஒதுக்குவதோடு கூடுதலாக, அன்றாட தேவையினடிப்படையில் வழங்க வேண்டும்" என்றும் சுப்ரீம் கோர்ட் ஏப்ரல் 30 திகதி உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு நேற்று மே 2 அன்று வெளியிடப்பட்டது. உதர்ரவின்படி கோர்ட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள கால எல்லை இன்று மே 3 ந்திகதி நள்ளிரவுடன் முடிவடைகிறது.

இது இவ்வாறிருக்க, கர்நாடகா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் பலியாகியிருப்பதாகவும், இது தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.