இந்தியா

இந்தியாவில் அன்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில், தமிழகத்தில் திமுக கட்சிக்காகவும் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காகவும் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்.

அவருடைய ஐ-பேக் நிறுவனம் கடந்த இரு தேர்தல்களில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு இந்தப் பணியைச் செய்து கொடுத்து புகழ்பெற்றது. தற்போது திமுக, திரிணாமுல் ஆகிய இரண்டு கட்சிகளுமே அவர் அமைத்துக் கொடுத்த வியூகங்கள் காரமாகவும் அமோக வெற்றி பெற்றிருப்பதால் அனைவரின் கவனமும் பிரசாந்த் கிஷோர் மீது திரும்பியிருக்கிறது. இந்தகைய சூழலில், தொழில்முறைத் தேர்தல் வியூகர் பணியில் இருந்து விலகுவதாக பிரசாந்த் கிஷோர் திடீரென அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வடக்கிந்திய ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் நேற்று பேட்டி அளிதார். அந்தப் பேட்டியில்: “தேர்தல் வியூக வடிவமைப்புப் பணியில் கடந்த 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். அச்சமயங்களில் பல சவால்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், மேற்கு வங்கத்தேர்தலில் இருந்ததைப் போன்ற சவால்களை இதுவரை நான் சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட அந்த மாநிலம் முழுவதையுமே மத ரீதியாக பாஜக பிளவுப்படுத்திவிட்டது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேர்தல் ஆணையமோ கை்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் நடந்து கொண்டது. எங்களுடைய (திரிணாமூல் காங்கிரஸ்) பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்துவதிலும் பல சிக்கல்கள் எழுந்தன. இவற்றையெல்லாம் கடந்துதான் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

ஐந்து மாநிலங்களுக்கு நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மிகவும் சவாலாக நான் கருதிய விஷயம், முதல்வர் மம்தா பானர்ஜியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதுதான். ஏனெனில், அவரை மையப்படுத்தியே நாங்கள் தேர்தல் பிரச்சாரங்களையும், வியூகங்களையும் அமைத்திருந்தோம். ஆனால், சக்கர நாற்காலியில் அவர் வலம் வந்து மக்களின் இதயத்தை வென்றுவிட்டார். வங்க மக்களிடம் மம்தா எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருக்கிறார் என்பதை உணர்ந்த தருணம் அது.

ஆனால், எதிரணியினர், பிரதமர் நரேந்திர மோடியின் புகழை மட்டும் வைத்துக் கொண்டு அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற முடியாது என்பது தற்போது நிரூபணமாகி இருக்கிறது. தேர்தல் வியூகராக எனது பணியை போதுமான அளவுக்கு செய்துவிட்டதாக கருதுகிறேன். இனியும் இதனை தொடர விரும்பவில்லை. எனக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது. வாழ்க்கையில் வேறு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அதனால் தேர்தல் வியூகர் பணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார். முன்னதாக, மீண்டும் அரசியலில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, “நான் அரசியலில் தோல்வி அடைந்தவன். எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை இனிதான் யோசிக்க வேண்டும்" என பதில் அளித்துள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.