இலங்கை

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

“அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்பொம்பியோவின் வருகை இலங்கைக்கு கிடைத்த பெரும் கௌரவம். இருநாடுகளின் மத்தியிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காகவே அவர் இலங்கை வந்தார்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது சீனாவே பொருளாதார ரீதியில் அதிக வலுவுள்ள நாடு. அமெரிக்காவே சீனாவிடம் கடன்பெற்றுள்ளது. எங்களை பொறுத்தவரை மறைப்பதற்கு எதுவுமில்லை. நாங்கள் மைக்பொம்பியோவிடம் வெளிப்படையாக பேசினோம், சீனாவின் கடன்பொறியில் இலங்கை சிக்கவில்லை என ஜனாதிபதி அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் தெரிவித்தார். எம்.சி.சி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது குறித்து அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை, இந்த உடன்படிக்கை நல்லது அல்லது மோசமானது என நான் தெரிவிக்கவில்லை. ஆராயவேண்டும் என்றே தெரிவித்தேன்.” என்றுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.