இலங்கை

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இப்புயல் சின்னம் திருகோணமலையிலிருந்து வடகிழக்கு திசையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 500 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்ததாகவும் இன்று இரண்டாம் திகதி மாலை அல்லது இரவு மட்டக்களப்புக்கும் பருத்தித்துறைக்குமிடையே கரையைக் கடக்குமென்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் கடும் புயலாக மேலும் வலுவடையும் வாய்ப்புமீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை அதிகளவில் இருப்பதுடன் இன்று புதன்கிழமை மாலை அல்லது இரவில் இது புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளது.

இன்று மாலை அல்லது இரவு புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதுடன் வடக்கு, கிழக்கில் சுமார் 200 மில்லி மீட்டர் மழை வரை கடும் மழை பெய்யும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. கிழக்கு கரையோரங்களில் கடல் சீற்றமாக காணப்படுவதுடன் அலைகள் சுமார் 03 மீற்றர் உயரம் வரை எழும் என்பதுடன் கடல் நீர் உட்புகவும் வாய்ப்புள்ளது.

மட்டக்களப்பு, திருகோணமலை, பருத்தித்துறை பகுதிகளினூடாக புயல் கரையை கடக்கும் அதேவேளை மரங்கள் முறிவதுடன் மின்கம்பங்கள், மின் கம்பிகளுக்கு பலத்த சேதம் ஏற்படும். அத்துடன் வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கிழக்கு கரையோரப் பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமது மீன்பிடி வள்ளங்கள் படகுகள், தோணிகள் என்பவற்றை மிகவும் பாதுகாப்பாக கரையில் இழுத்து கட்டி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இச்சமயத்தில் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்களும் முடிந்தவரை கரைக்கு திரும்புமாறும் தமது உடமைகளை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் புயல் மன்னார் ஊடாக வெளியே செல்லும் என்றாலும் இதன் தாக்கம் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் காணப்படுமென வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.