இலங்கை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் கைது செய்யப்பட்டுவருகின்றனரென தெரிவித்துள்ள அவர், கடந்த 24 மணித்தியாலங்களில் சுகாதார வழிமுறைகளை மீறி செயற்பட்ட 30க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் புறக்கோட்டை பொலிஸ் நிர்வாகப் பிரிவில் தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் நீக்கப்பட்டுள்ள நிலையிலும் அங்கு மெனிங் சந்தை, நாலாம் குறுக்குத்தெரு, ஐந்தாம் குறுக்குத்தெரு பகுதியிலுள்ள மொத்த விற்பனை நிலையங்களை திறப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று சமூக இடைவெளியை பின்பற்றுவது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.