‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“மீதமுள்ள நான்கு ஆண்டுகளில் மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளேன். பெரும் எதிர்பார்ப்புகளுடனேயே மக்கள் என்னை அதிகாரத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
'கிராமத்துடன் கலந்துரையாடல்' எனும் தலைப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரச சேவையில் திறமையின்மையை நீக்குவது மக்களின் முக்கிய கோரிக்கையாகும். சுங்கத்துறையின் வினைத்திறனின்மை மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் வெற்றிக்கு தடையாக இருக்கும் அனைத்து அதிகாரிகளையும் அகற்றியேனும் திறமையின்மை மற்றும் ஊழல் நிறுத்தப்படும். அனைத்து அரச நிறுவனங்களிலும் நல்ல அதிகாரிகள் உள்ளனர். ஊழலிலிருந்து விடுபட்ட திறமையான அரச சேவையொன்றை ஏற்படுத்துமாறு அவர்களும் என்னிடம் கோருகின்றனர்.” என்றுள்ளார்.