இலங்கை

அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளையும் இணைத்து தமிழ்த் தேசிய பேரவையை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டிருந்த அதேவேளை கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொண்டிருக்கவில்லை.

சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய 10 கட்சிகள் இன்றைய தினம் சந்தித்து இன்று இருக்கக்கூடிய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் வந்திருந்த முதலாவது வரைவு தொடர்பாகவும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல விடயங்களை ஆராய்ந்து இருந்தோம்.

அதில் முக்கியமாக இரண்டு விடயங்கள் பேசப்பட்டு இருக்கின்றது வருகின்ற 26ஆம் திகதி வவுனியாவில் தமிழ் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் கட்சிகளும் அதேபோல கிறிஸ்தவ, இந்து பெரியார்களும் முக்கியமாக வடகிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள் அதேபோல தமிழ் இந்து பரப்பில் இருக்கக்கூடிய பல்வேறுபட்ட ஆதின முதல்வர்களும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பல தரப்பினரும் இணைந்து எதிர்வரும் 26ஆம் திகதி வவுனியாவில் பேச உள்ளோம்.

அதில் முக்கியமாக தமிழ் மக்களினுடைய அரசியல் கோரிக்கைகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக இந்த முதலாவது வரைபில் சரியான முறையில் பிரதிபலிக்கவில்லை. அது தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற என்ற விடயமாக இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆகவே வரைவு என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு சரியான தீர்வினை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும் அந்த விடயங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை தமிழ்த் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய பல கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு முக்கியமான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இருந்தார்கள்.

ஆனால் அந்த முதலாவது வரைபில் அவை உள்ளடக்கப்படவில்லை எனவே 26ஆம் திகதி அடுத்த கட்டமாக இதற்கு என்ன செய்வது என்பது பற்றி ஆராய்வதற்காக ஒன்றுகூடி பேச உள்ளோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புக் கூறுதல் தீர்வு என்பது முக்கியமானது என்பதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் இது சர்வதேச அரசியலுக்கு அப்பால் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனித உரிமைகள் ,பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுகள் பொறுப்புக்கூறல் போன்றவற்றை சர்வதேச சமூகம் உண்மையான உணர்ந்து இந்த அடிப்படையில் தீர்மானம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.

அடுத்த கட்டமாக தற்போது நாங்கள் 10 கட்சிகள் கூடி பேசிக் கொண்டிருக்கின்றோம் தமிழர் தரப்பில் இருக்க கூடிய ஏனைய கட்சிகள் கூட இணையலாம்.

நாங்கள் இந்த பத்து கட்சிகளையும் மிக விரைவாக ஒரு தமிழ்த் தேசிய பேரவையாக உருவாக்குவதற்கான கோரிக்கை இப்பொழுதும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது அந்த கோரிக்கை இங்கு வந்திருந்த அனைத்து கட்சியினராலும் பேசப்பட்டது.

எனவே இந்த விடயம் தொடர்பில் தொடா்பில் பேசப்பட இருக்கின்றது அத்தோடு வருகிற 28 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மீண்டும் கூடி இந்த தமிழ் தேசிய பேரவை உருவாக்குவது பற்றிய இறுதி தீர்மானம் எடுக்கப்பட உள்ளது ஆகவே அதனடிப்படையில் வரக்கூடிய 28ஆம் திகதி ஒரு தமிழ் தேசிய பேரவை யினை உருவாக்கி அந்த பேரவை என்பது தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டக்கூடிய சாத்தியப்பாடான முடிவுகளை எடுப்பதற்கான செயல்படும்.” என்றுள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, நேரடி வகுப்புகளாக இல்லாமல், இணையவழிக் கல்வி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதராக மூத்த தூதரக அதிகாரியும், கருப்பினத்தைச் சேர்ந்தவருமான 68 வயதாகும் லிண்டா தோமஸ் கிரீன்பீல்டு என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடென் நியமித்துள்ளார்.

கடந்த சில தசாப்தங்களில் இல்லாதவாறு இஸ்ரேல் அரசானது ஒரு பாரிய இரகசிய அணுவாயுத செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக AP ஊடகம் செய்மதிப் புகைப் படங்களது ஆதாரத்தை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.