இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை தற்போது பாராளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அறிக்கையின் சில பக்கங்களை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இவ்வாறு வெளியிட்ட பதிவில், ஆணைக்குழுவால் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

அதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தண்டனைச் சட்டத்தில் எந்தவொரு பொருத்தமான ஏற்பாட்டின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக சட்டமா அதிபர் பரிசீலிக்க வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.