இலங்கை

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஒன்றான ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியாவின் தாய் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி, பிரித்தானியாவில் அஸ்ட்ரா செனகா நிறுவனத்திடமிருந்து 3.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளது.

மேலும் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கையின் அரச ஔடத கூட்டுத்தாபணம் பிரித்தானியாவின் அஸ்ட்ராசெனெகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிலையில், கொள்முதல் ஒப்பந்தம் குறித்து பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதேநேரம், இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து 10 மில்லியன் கொவிஸீல்ட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவை செலுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதேநேரம், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கைக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கோவெக்ஸ் தடுப்பூசி செலுத்தல் திட்டத்தின்கீழ், உலக சுகாதார ஸ்தாபனத்தினால், வறிய நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.