இலங்கை

“வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவு குறைந்து தற்போது மீண்டும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலை நீடித்து மக்கள் வழமை நிலைமைக்கு திரும்ப வேண்டுமானால் சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம்.” என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

குறிப்பாக இது பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் மிக மிக அவதானமாக நடந்து தங்களையும் சமூகத்தையும் முழு நாட்டையும் உபாதைகளுக்குள் தள்ளி விடாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எங்கிருந்தோ வந்த கொரோனா வைரஸ் திடீரென யாழ்.குடாநாட்டை தாக்கியபோது அதற்காக இரவு பகல் பாராது சுகாதார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வைத்தியர்கள், சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் மற்றும் சகல தரப்பினருக்கும் ஆளுநர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இதே வேகத்தில் கட்டுப்படுத்தல் பணிகள் தொடர வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக புத்தாண்டில் மக்கள் நமது கொண்டாட்டங்களை வீடுகளில் இருந்தவாறு உறவுகளுடன் கொண்டாட வேண்டும். இது ஒரு சோதனை காலம் என்பதால் எதிர்கால வாழ்வு சுபிட்சம் பெற நாங்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டுமென்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.