இலங்கை

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் காணப்படும் கருத்து வேறுபாடுகளிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளார். 

மே தின நிகழ்வுகள் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் காணப்படும் கருத்து வேறுபாடுகளிற்கு தீர்வை காணலாம் என நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளதாக தென் இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 19ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள விசேட கூட்டத்திற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படடுள்ளது.

அரசியல் கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பில் தங்கள் சொந்தக்கருத்துக்களை கொண்டிருப்பது வழமை என தெரிவித்துள்ள பிரதமர், வேறுபட்ட அரசியல் கொள்கைகள் கருத்துக்களால் இந்த நிலை காணப்படும் என தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் காணப்படும் அரசியல் கூட்டணிகளை கருத்தில்கொள்ளும்போது இது புதிய விடயமல்ல என தெரிவித்துள்ள பிரதமர், இது எங்கள் கூட்டணியில் உள்கட்சி ஜனநாயகம் காணப்படுவதை வெளிப்படுத்துகின்றது எனவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக கூட்டணி கட்சிகள் பல விவகாரங்கள் தொடர்பில் தங்கள் சொந்தக்கருத்துக்களை முன்வைக்கலாம் என தெரிவித்துள்ள பிரதமர், கூட்டணியின் ஐக்கியத்திற்கு ஆபத்து என்பது இதன் அர்த்தமல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.