இலங்கை

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

“இலங்கை கடலில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குவேன் என்ற கூற்று தவறானது. இது ஒரு மீன் வள அமைப்பொன்றின் ஒரு யோசனை மட்டுமே. இறுதி முடிவெதுவும் எடுக்கப்படவில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலுக்குள் நுழைவதால் குறிப்பாக கீழடி பயணத்தால் கடல் படுகைகள் அழிவதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இலங்கை கடலுக்குள் நுழையும் அனைத்து இந்திய மீனவர்களையும் தொடர்ந்து கைது செய்ய கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் மீனவர்கள் மற்றும் மீனவர் அமைப்புகளுடன் கலந்துரையாடிய பின்னரே மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.