இலங்கை

இலங்கையில் புர்கா உள்ளிட்ட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் உயிர்த்த ஞாயிறுக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் சரத் வீரசேகர புர்காவிற்கு தடை விதிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் முறையான ஆலோசனை மேற்கொண்ட பின்னரே முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கான தடைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.