இலங்கை

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளிற்கு பதில் அரசாங்கம் ரஷ்யாவிடமிருந்து வானூர்திகளை (ஹெலிகொப்டர்களை) கொள்வனவு செய்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் மக்களின் துன்பங்களை தீர்ப்பதற்கான திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், நாட்டு மக்களிற்கு அவசியமான தடுப்பூசியை பெறுவதற்கு அரசாங்கம் தவறிவிட்டது எனவும் கூறியுள்ளார்.

தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், பெருந்தொற்று நேரத்தில் தடுப்பூசியை விட வானூர்திகளை கொள்வனவு செய்வது எவ்வளவு முக்கியமானது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.