இலங்கை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிற்கும் கேரளாவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து கேரளப் பொலிஸாரும், இந்தியப் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.

அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளதாவது, “கேரளாவுடன் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு உள்ள தொடர்புகள் குறித்த குறிப்பிடத்தக்க விபரங்கள் எவையும் இன்னமும் கிடைக்காத போதிலும் 2009இல் அவர் கேரளாவின் காசர்கோட்டுக்கு ஏன் விஜயம் மேற்கொண்டார் என்பது குறித்தும் கேரளாவின் மததலைவர்கள் சிலருடன் அவருக்குள்ள தொடர்புகள் குறித்து விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

கேரளாவின் மதத் தலைவர்கள் சிலர் இலங்கையில் ரிஷாட் பதியுதீனை சந்தித்துள்ளதுடன் 2013இல் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டவேளை அவர் குறிப்பிட்ட மததலைவர்களை சந்தித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் தந்தை காசர்கோட்டின் பட்னா என்ற பகுதியை பூர்வீகமாக கொண்டவர் என தெரிவித்துள்ள புலனாய்வு அதிகாரிகள், அவர் அந்த பகுதியில் உள்ள சிலருடன் தொடர்பிலிருந்தார் எனவும் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு பணியகமும் தேசிய விசாரணை முகவர் அமைப்பும் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு இது தொடர்பான விசாரணைகளில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளன.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட ஷஹ்ரான் ஹாசிமுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பை பேணிய தமிழ்நாட்டை சேர்ந்த ஐஎஸ் ஆதரவாளர் ஒருவரை 2019 ஜூன் மாதம் தேசிய புலனாய்வு முகவர் அமைப்பை சேர்ந்தவர்கள்கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இலங்கையின் அரசியல்வாதிக்கும் கேரளாவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து வெளியான தகவல்களை உறுதிசெய்வதற்காக கேரளபொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என மாநிலத்தின் தலைமை பொலிஸ் அதிகாரி லோக்னாத் பெகேரா தெரிவித்துள்ளார்.

கேரளாவின் என்ற பட்னா பகுதியிலிருந்து 2016இல் ஐஎஸ் அமைப்புடன் இணைவதற்காக சிரியா சென்ற ஐந்து பேர் குறித்த விசாரணைகளின் போது அவர்களில் சிலர் இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத்திடம் சென்றுள்ளமையும் அவர்கள் அங்கு மதபயிற்சி பெற்ற பின்னர் சிரியாவிற்கு சென்றுள்ளமையும் தெரியவந்தது என தெரிவித்துள்ள அதிகாரிகள் ரிசாத் பதியுதீனிற்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஆழமான விசாரணை இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.