இலங்கை

இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்துக்குள் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

புதிய அரசியலமைப்புக்கான வரைபை, எதிர்வரும் ஜூன் மாதத்தில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க, நிபுணர் குழுவினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புதிய அரசியலமைப்பில், தேர்தல் முறைமை தொடர்பான விடயம், பிரதான அம்சமாகக் காணப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

களனி ரஜமஹா விகாரையில் நேற்று திங்கட்கிழமை மத வழிபாட்டில் ஈடுப்பட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேய, ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அமைச்சர், “உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற, நிபுணர் குழுவின் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நிபுணர் குழுவினர், அரசியல் கட்சிகளிடமிருந்தும் அமைப்பினரிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும், அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளைக் கோரியுள்ளார்கள்.

எக்காரணத்துக்காகவும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்படாது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம். நாட்டுக்குப் பொருந்தும் வகையிலான அரசியலமைப்பை உருவாக்க அரசாங்கம் உரிய கவனஞ்செலுத்தியுள்ளது. அரசியலமைப்பு குறித்து தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய இரு பிரதான வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ளோம். அரச நிர்வாகத்துக்குத் தடையாக இருந்த 19ஆவது திருத்தத்தை நீக்கி, 20ஆவது திருத்தத்தைப் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றியுள்ளோம்.

அத்துடன், புதிய அரசியலமைப்பை உருவாக்குவது சாத்தியமற்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ள கருத்து உண்மைக்கு புறம்பானது. அவரது அரசியல் நிலை குறித்து நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.” என்றுள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.