உலகம்

சுமார் 200 பேரை ஏற்றிச் சென்ற எதிலிகள் படகு ஒன்று செனகல் நாட்டின் கடற்கரையில் மூழ்கியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

ஐரோப்பா நோக்கி கடந்த சனிக்கிழமை Mbor எனும் நகரத்தை விட்டு வெளியேறிய எதிலிகள் படகு ஒன்று புறப்பட்ட சில மணி நேரங்களிலே தீப்பிடித்து கடல் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 200 பேர் பயணம் மேற்கொண்டிருந்த இப்படகிலிருந்து இதுவரை 60 பேர் மீட்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 140 பேர் நீரில் மூழ்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஸ்பெயினின் கேனரி தீவுகள் வழியாக புலம்பெயர்ந்தோர்கள் ஐரோப்பாவின் பிரதான நிலப்பகுதியை அடைய முயற்சிப்பதாக நம்பப்படுகிறது. மேற்கு ஆபிரிக்காவிலிருந்து இவ் வழிப்பாதை கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து பிரதானமாக பயன்படுத்தப்பட்டுவருவது குறிப்பிடதக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.