உலகம்

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

தொற்றுநோயின் கட்டுப்பாட்டை சுவிட்சர்லாந்து இழந்துவிட்டது என்பதை மறுத்த அவர், ஒரு மாதத்திற்கு முன்பிருந்த நிலைமை மோசமடைந்துள்ளது என்பதை மறுக்கவில்லை. "நாங்கள் கோடையில் மாநிலங்களுடன் தயாரித்த திட்டத்தை பின்பற்றினோம். வளைவு உயரத் தொடங்கியதும், உடனடியாக கூடுதல் நடவடிக்கைகளையும் தொடங்கினோம். நான் பல முறை மாநிலங்களை தொடர்பு கொண்டு செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளேன் ”, என்று கூறினார்.

சுகாதார அமைச்சர் மேலும் பேசுகையில், "ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொற்றுக்களின் எண்ணிக்கை மெதுவாக இருந்தது. ஆனால் அக்டோபர் மாதத்தில் மெதுவாக இரட்டிப்பாகிய தொற்று எண்ணிக்கை விரைவாகவும் ஆச்சரியமாகவும் ஒரு வாரத்தில் உயர்ந்தது. அக்டோபர் 16 ம் தேதி பணிக்குழு இந்த விரைவான அதிகரிப்பு குறித்து அறிக்கை அளித்தது. அது கிடைத்த இரண்டு நாட்களில், கூட்டாட்சி அரசு கட்டுப்பாட்டை கடுமையாக்கும் என்று முடிவு செய்தது" என்றார்.

சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட்டின் கூற்றுப்படி, தற்போதைய நிலைமையைப் பொறுத்து, மாநிலங்கள் தங்கள் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், பிராந்திய மட்டத்தில் மிகவும் வேறுபட்ட முறையில் தற்போது செயல்பட முடியும் என்பது முக்கியமானது.

சுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சிலவற்றில் வேறுபடும் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதுகாப்பு விதிகள் !

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.