உலகம்

இத்தாலியின் சுகாதார அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய சோதனை தரவுகளின் படி, கடந்த 14 நாட்களில் நாடு முழுவதும் , கோவிட் -19 வைரஸ் தொற்று வீதம் குறைந்திருப்பதனால், மூன்று சிவப்பு மண்டலங்கள் மற்றும் இரண்டு ஆரஞ்சு மண்டலங்களில் இந்த வார இறுதியில் அதாவது இன்று ஞாயிறு முதல் பாதுகாப்பு விதிகள் தளர்த்தப்படும்.

கலாப்ரியா, லோம்பார்டி மற்றும் பீட்மாண்ட் ஆகிய சிவப்பு மண்டல பகுதிகள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், இதுவரை ஆரஞ்சு மண்டலங்களாக இருந்த லிகுரியா மற்றும் சிசிலி என்பவை மஞ்சள் நிறப் பிராந்தியங்களாகவும் மாற்றம் பெறும். இத்தாலிய சுகாதார மந்திரி ராபர்டோ ஸ்பெரான்சா வெள்ளிக்கிழமை இரவு இதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இதன்படி நவம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை இன்று முதல் அந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சிவப்பு (அதிக ஆபத்து) மண்டலங்கள்: டஸ்கனி, அப்ருஸ்ஸோ, காம்பானியா, வால்லே டி ஆஸ்டா, போலோன்யா.

ஆரஞ்சு (நடுத்தர ஆபத்து) மண்டலங்கள்: பக்லியா, கலாப்ரியா, லோம்பார்டி, பீட்மாண்ட், எமிலியா ரோமக்னா, மார்ச்சே, அம்ப்ரியா, பசிலிக்காடா, ஃப்ரியூய்-வெனிசியா-கியுலியா.

மஞ்சள் மண்டலங்கள்: லிகுரியா, சிசிலி, சார்டினியா, லாசியோ, மோலிஸ், வெனெட்டோ, ட்ரெண்டோ மாகாணம்.

சுவிற்சர்லாந்தில் கோவிட் -19 தடுப்பூசி எதிர்பார்த்ததை விட விரைவில் கிடைக்கலாம் !

இத்தாலியின் சில பிராந்தியங்களில் வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தை அடைந்துள்ளது என்பதைக் காட்டினாலும், சில பகுதிகள் கிறிஸ்மஸைச் சுற்றி உச்சத்தை எட்டும் என்றும், சுகாதார வல்லுநர்கள் இந்த தொற்றுநோயின் முடிவுக்கு வெகுதூரம் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதனால், அதிக ஆபத்துள்ள மண்டலங்களில் உள்ளவர்கள் தங்கள் நகராட்சிக்குள் வாழவதற்கும், வேலை, படிப்பு, சுகாதாரம் அல்லது பிற அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.