ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இது ஜப்பான் அரசுக்கு ஆத்திரமூட்டும் ஒரு இராணுவ நகர்வு என்று கூறப்படுகின்றது.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் ஊடகமான Zvezda TV இல், இந்த நகர்வானது ரஷ்யாவால் கையகப் படுத்தப் பட்ட 4 தீவுகளில் ஒன்றான இட்டுருப் இல் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் வான் வழித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவே என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. குறித்த இந்த 4 தீவுகளின் வடக்குப் பகுதிகளை ஜப்பான் உரிமை கோருவது குறிப்பிடத்தக்கது. இங்கு ஏற்கனவே ரஷ்யாவின் குறுகிய வீச்சம் கொண்ட போர் விமான எதிர்ப்பு ஏவுகணைப் பொறிமுறை செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தெற்கு குரில்ஸ் தீவுகள் என்று அழைக்கப் படும் இத்தீவுப் பகுதிகளை 2 ஆம் உலகப் போரின் இறுதியில் சோவியத் ரஷ்யா கைப்பற்றியது. அன்றிலிருந்து ஜப்பானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இவை தொடர்பில் முறுகல் போக்கு நீடிப்பதுடன் அதிகாரப்பூர்வ அமைதி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இயலாத நிலையும் நீடிக்கின்றது.
இந்நிலையில் ரஷ்யாவின் இராணுவ நகர்வுகள் ஜப்பானை மிகவும் உணர்வு பூர்வமாகப் பாதிக்கும் போதும் ஆக்டோபரில் இந்த நகர்வானது இராணுவப் பயிற்சியின் ஒரு அங்கமே என்றும் போர் முனைப்புக்காக அல்ல என்றும் ரஷ்யா தெரிவித்திருந்தது. இந்த நடவடிக்கைகள் தொடர்பில் ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வை விரைவில் எட்டுவேன் என்று தெரிவித்திருந்த ஜப்பானின் முன்னால் பிரதமர் ஷின்ஷோ அபே உடல் நலக் குறைவால் ஆகஸ்ட்டில் பதவி துறந்திருந்தார். இதன் பின்பு ரஷ்யா இந்த ஏவுகணை நகர்வை மேற்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்