உலகம்

ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அவரது அரசின் ஊழலைக் கடுமையாக விமரிசித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி கடந்த ஆகஸ்ட்டில் மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும் போது விஷம் கொடுக்கப் பட்டதால் மயங்கி விழுந்தார்.

சிகிச்சைக்காக ஜேர்மனியில் அனுமதிக்கப் பட்ட இவருக்கு ரஷ்ய அரசு தான் விஷம் கொடுத்ததாக குற்றம் சாட்டப் பட்டது.

சர்வதேசமும், ஜேர்மனியும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் குணமடைந்த நாவல்னி ஜேர்மனியில் ஓய்வெடுத்து வந்தார். கடந்த வாரம் ரஷ்யா திரும்பிய இவரை ரஷ்யப் போலிசார் உடனே கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை அடுத்து நாவல்னியின் கைதைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் சமீப நாட்களாக ரஷ்யாவின் பல இடங்களில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட பல இடங்களில் நிலவும் கடும் குளிரையும் பொருட் படுத்தாது 10 000 இற்கும் அதிகமான பொது மக்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குபற்றினர்.

ஒரு சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை அடக்கும் நடவடிக்கையாக நாவல்னியின் மனைவி உட்பட 3000 பேர் வரை ரஷ்யப் போலிசார் இதுவரை கைது செய்துள்ளனர். ஆனால் தற்போது நாவல்னியின் மனைவி மாத்திரமே விடுவிக்கப் பட்டுள்ளார். நாவல்னியின் கைதுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை ரஷ்யாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவின் கிழக்கே சைபீரியா முதல் மாஸ்கே செண்ட் பீட்டர்ஸ்பர்க் உட்பட சுமார் 100 நகரங்களில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இந்தப் போராட்டத்தில் மத்திய மாஸ்கோவில் மாத்திரம் 40 000 பேர் ஒன்று கூடியதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு தசாப்தத்தில் ரஷ்யாவில் மேற்கொள்ளப் பட்ட மிகப்பெரிய ஆர்ப்பாட்டப் பேரணி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராகத் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை உருவாக்குவதற்கு அச்சாணியாகத் திகழ்ந்தவர் தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

ஐரோப்பிய ஆணையத்தால் வகுக்கப்படவுள்ள புதிய திட்டத்தில் டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் அறிமுகமாகவுள்ளது.

சுவிற்சர்லாந்தில் மார்ச் 5ம் திகதி நண்பகலில் ஒரு நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடித்து அமைதிகொள்ள சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் தலைவர் பார்மலின் அழைப்பு விடுத்துள்ளார்.