உலகம்

உலகளாவிய கோவிட்-19 பெரும் தொற்றுக்கள் 10 கோடியை மிகவும் அண்மித்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ரஷ்யாவில் தயாரிக்கப் பட்டு வரும் ஸ்புட்னிக் V கோவிட்-19 தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதியை அளித்துள்ளது.

கடந்த வாரம் ஏற்கனவே பிரிட்டனின் ஆஸ்ட்ராசெனெகா தடுப்பு மருந்துக்கும், சீனாவின் சினோபார்ம் தடுப்பு மருந்துக்கும் பாகிஸ்தான் தனது நாட்டில் அவசர அனுமதியை அளித்திருந்தது. இதேவேளை கோவிட்-19 இனால் உலகில் மிக மோசமாக பாதிக்கப் பட்ட 2 ஆவது நாடான பிரேசிலில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைத் தொடர்ந்து பல வாரங்கள் கழித்தே தடுப்பு மருந்து வழங்கப் படும் திட்டம் ஆரம்பிக்கப் பட்டிருந்தது. ஆனால் வெகு விரைவாகவே அங்கு தடுப்பு மருந்துகள் தீர்ந்து விட்டதாகவும், ஊசிகளுக்கும் அவசியமான பிற உபகரணங்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இதனால் அங்கு மருத்துவ நிபுணர்களும், பொது மக்களும் அதிபர் பொல்சொனாரோவின் நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அரசுக்கு எதிராக அங்கு ஆயிரக் கணக்கான மக்கள் இந்த வார இறுதியில் போராட்டங்களுக்கு ஒழுங்கு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மறுபுறம் பெருகி வரும் கோவிட்-19 தொற்றுக்களைக் கட்டுப்படுத்த ஹாங்கொங்கில் முதன் முறையாக நாடளாவிய ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டுள்ளது.

அமெரிக்காவில் புதிய அதிபர் ஜோ பைடெனின் நிர்வாகத்தின் கீழ் கோவிட்-19 பெரும் தொற்றுப் பரவுதலைக் குறைப்பதற்கான புதிய நடைமுறைகள் உத்வேகத்துடன் அமுல் படுத்தப் பட்டு வருகின்றது. ஆயினும் கோவிட்-19 உயிரிழப்புக்கள் 6 இலட்சத்தை எட்டலாம் என்றும், மக்கள் பசியால் பாதிக்கப் படலாம் என்றும், வேலை இழப்புக்கள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்வு கூறியுள்ள அதிபர் பைடென் நாம் இவற்றை எதிர்கொள்ள விரைந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளிவிபரம் :

மொத்த தொற்றுக்கள் : 99 388 136
மொத்த உயிரிழப்புக்கள் : 2 131 726
குணமடைந்தவர்கள் : 71 457 920
ஆக்டிவ் தொற்றுக்கள் : 25 798 101
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 110 716

நாடளாவிய புள்ளிவிபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 25 566 789 : மொத்த உயிரிழப்புக்கள் : 427 635
இந்தியா : 10 655 435 : 153 376
பிரேசில் : 8 816 254 : 216 475
ரஷ்யா : 3 719 400 : 69 462
பிரிட்டன் : 3 617 459 : 97 329
பிரான்ஸ் : 3 035 181 : 72 877
ஸ்பெயின் : 2 603 472 : 55 441
இத்தாலி : 2 455 185 : 85 162
துருக்கி : 2 424 328 : 24 933
ஜேர்மனி : 2 137 689 : 52 536
கொலம்பியா : 2 002 969 : 50 982
ஆர்ஜெண்டினா : 1 862 192 : 46 737
மெக்ஸிக்கோ : 1 752 347 : 149 084
தென்னாப்பிரிக்கா : 1 404 839 : 40 574
ஈரான் : 1 367 032 : 57 294
கனடா : 742 531 : 18 974
பாகிஸ்தான் : 532 412 : 11 295
சுவிட்சர்லாந்து : 509 279 : 9050
சீனா : 88 991 : 4635
இலங்கை : 57 587 : 280

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராகத் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை உருவாக்குவதற்கு அச்சாணியாகத் திகழ்ந்தவர் தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

ஐரோப்பிய ஆணையத்தால் வகுக்கப்படவுள்ள புதிய திட்டத்தில் டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் அறிமுகமாகவுள்ளது.

சுவிற்சர்லாந்தில் மார்ச் 5ம் திகதி நண்பகலில் ஒரு நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடித்து அமைதிகொள்ள சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் தலைவர் பார்மலின் அழைப்பு விடுத்துள்ளார்.