உலகம்

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடென் பதவியேற்றதன் பின் தென் சீனக் கடற்பரப்பில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.

மேலும் தாய்வான் நீரிணைக்கு அருகே தனது வல்லமையைக் காட்ட சீனா யுத்த விமானங்களை அனுப்பியுள்ளது. இந்த வார இறுதியில், கடற்பரப்புக்களுக்கு இடையேயான சுதந்திரத்தை வலியுறுத்த அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ஒன்று தென் சீனக் கடற் பரப்பில் நுழைந்துள்ளது.

இதற்குப் பதிலடியாகத் தனது வலிமையைக் காட்ட தாய்வான் வான் பரப்பில், சீன ஜெட்டுக்களும் பொம்பர் விமானங்களும் அத்துமீறி நுழைந்ததாக தாய்வான் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென்சீனக் கடலில் தனக்குச் சொந்தமான தீவுகளுக்கு மிக அருகே அமெரிக்க கப்பல்கள் வருகை தந்திருப்பதாக சீனா புகார் அளித்துள்ளது.

கிட்டத் தட்ட தென் சீனக் கடலின் முழுப் பரப்பையுமே சீனா சொந்தம் கொண்டாடுவதால் அப்பகுதியில் தமது உரிமைகளை வேண்டும் தெற்காசிய தென்கிழக்காசிய நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே சர்ச்சை நீடிக்கின்றது. இதனால் முன்னால் அமெரிக்க அதிபர்கள் ஒபாமா மற்றும் டிரம்ப் இருவரது ஆட்சிக் காலத்திலும் இப்பகுதியில் தொடர்ச்சியாக அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இது சீனாவுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் சனிக்கிழமை அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலது ரோந்து நடவடிக்கையும் இக்கடற்பரப்பில் ஒவ்வொரு நாட்டுக்குமான சுதந்திரத்தை வலியுறுத்தும் ஒரு நடவடிக்கையே என அமெரிக்க இந்தோ பசிபிக் கமாண்ட் தெரிவித்துள்ளது. இப்பரப்பில் தமது உரிமையை வேண்டும் மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனேய் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் பிரசன்னத்தை வரவேற்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் தனது ஆதிக்கத்தை அதிகரித்து வரும் சீனா, பல இடங்களில் செயற்கைத் தீவுகளை அமைக்கவும் முனைந்து வருகின்றது. இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பல சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா பல சுற்று பொருளாதாரத் தடைகளை தொடர்ந்து விதித்து வருகின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராகத் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை உருவாக்குவதற்கு அச்சாணியாகத் திகழ்ந்தவர் தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

ஐரோப்பிய ஆணையத்தால் வகுக்கப்படவுள்ள புதிய திட்டத்தில் டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் அறிமுகமாகவுள்ளது.

சுவிற்சர்லாந்தில் மார்ச் 5ம் திகதி நண்பகலில் ஒரு நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடித்து அமைதிகொள்ள சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் தலைவர் பார்மலின் அழைப்பு விடுத்துள்ளார்.