உலகம்

இங்கிலாந்தில் புதிய உருமாறிய கொரோனா வைரஸின் தீவிரம் காரணமாக அங்கு ஊரடங்கு ஜூலை மாதம் 17 ஆம் திகதி வரை நீட்டிக்கப் படுவதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

மேலும் கோவிட்-19 பெரும் தொற்று அதிகமாக உள்ள வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வரும் நபர்கள் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப் படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என்றும் சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவிலோ புதிய அதிபர் ஜோ பைடென் கோவிட்-19 பெரும் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்குப் பெரும் முக்கியத்துவம் அளித்து வருகின்றார். இதன் ஒரு கட்டமாக புதிய பயணக் கட்டுப்பாடுகள் அமுலாகலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. இதன் படி பிரேசில், அயர்லாந்து, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரக்கூடிய அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்குப் பயணக் கட்டுப்பாடு விதிக்கப் படலாம் எனத் தெரிய வருகின்றது.

இது தவிர முதல் 100 நாட்களுக்குள் அமெரிக்காவில் சுமார் 10 கோடி பேருக்குத் கொரோனா தடுப்பூசி போட பைடென் விரும்புவதாகவும், இந்த 100 நாட்களுக்கு மக்கள் கட்டாய முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் கட்டளை பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 16 ஆம் திகதி முதல் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப் பட்டு வருகின்றது. மேலும் இந்தியா தனது அண்டை நாடுகளுக்கும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகின்றது. இதில் பல நாடுகளுக்கு நன்கொடையாகவும், மானியமாகவும் கூட தடுப்பூசிகளை அளித்து வருகின்றது. இந்தியாவிடம் இருந்து பூட்டான், மாலத் தீவு, நேபால், பங்களாதேஷ், மொரீஷியஸ், மியான்மார் மற்றும் செசல்ஸ் ஆகிய நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை மானியமாகப் பெற்றுள்ளன.

விரைவில் சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், மொரொக்கோ ஆகிய நாடுகளுக்கு வர்த்தக ரீதியாகவும் இந்தியா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் உள்ளது. இந்தியா ஒரு உண்மையான நட்பு நாடாக சர்வதேச சமூகத்துக்குத் தனது மருத்துவத் துறையைப் பயன்படுத்தி வருவதாக இந்தியாவை அமெரிக்க வெளியுறவுத் துறை டுவிட்டரில் பாராட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 99 821 480
மொத்த உயிரிழப்புக்கள் : 2 140 245
குணமடைந்தவர்கள் : 71 821 499
ஆக்டிவ் தொற்றுக்கள் : 25 859 736
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 110 519

நாடளாவிய புள்ளிவிபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 25 702 125 : மொத்த உயிரிழப்புக்கள் 429 490
இந்தியா : 10 668 674 : 153 508
பிரேசில் : 8 844 600 : 217 081
ரஷ்யா : 3 738 690 : 69 918
பிரிட்டன் : 3 647 463 : 97 939
பிரான்ஸ் : 3 053 617 : 73 049
ஸ்பெயின் : 2 603 472 : 55 441
இத்தாலி : 2 466 813 : 85 461
துருக்கி : 2 429 605 : 25 073
ஜேர்மனி : 2 147 740 : 52 777
கொலம்பியா : 2 015 485 : 51 374
ஆர்ஜெண்டினா : 1 867 223 : 46 827
மெக்ஸிக்கோ : 1 763 219 : 149 614
தென்னாப்பிரிக்கா : 1 412 986 : 40 874
ஈரான் : 1 372 977 : 57 383
கனடா : 747 383 : 19 094
பாகிஸ்தான் : 534 041 : 11 318
சுவிட்சர்லாந்து : 509 279 : 9065
சீனா : 89 115 : 4635
இலங்கை : 58 430 : 283

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராகத் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை உருவாக்குவதற்கு அச்சாணியாகத் திகழ்ந்தவர் தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

ஐரோப்பிய ஆணையத்தால் வகுக்கப்படவுள்ள புதிய திட்டத்தில் டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் அறிமுகமாகவுள்ளது.

சுவிற்சர்லாந்தில் மார்ச் 5ம் திகதி நண்பகலில் ஒரு நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடித்து அமைதிகொள்ள சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் தலைவர் பார்மலின் அழைப்பு விடுத்துள்ளார்.