உலகம்

ஜனவரி 25 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் உலகளாவிய கொரோனா தொற்றுக்கள் 10 கோடியைத் தாண்டியுள்ளன.

முன்னதாக ஜனவரி 9 ஆம் திகதி 9 கோடியையும், டிசம்பர் 25 ஆம் திகதி 8 கோடியையும் எட்டியிருந்தன. எனவே கொரோனா தொற்றுக்கள் 8 கோடியில் இருந்து 9 கோடியை எட்ட 15 நாட்களும், 9 கோடியில் இருந்து 10 கோடியை எட்ட 16 நாட்களும் எடுத்துள்ளன.

இன்றைய நிலவரப்படி நாடளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் இக்கட்டுரையின் கீழே தரப்படுகின்றது. நெதர்லாந்தில் கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. அங்கு பெப்ரவரி 10 ஆம் திகதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் அமுலாக்கப் பட்டுள்ளன.

நெதர்லாந்தின் பல பகுதிகளில் வெடித்த இப்போராட்டத்தில் போராட்டக் காரர்களால் சாலையில் நின்ற சில வாகனங்கள் தீ வைக்கப் பட்டதுடன், கடைகளும் சூறையாடப் பட்டன. மேலும் கொரோனா பரிசோதனை மையம் ஒன்றும் தீ வைக்கப் பட்டது. இதேவேளை உலகளவில் பல நாடுகளில் வழங்கப் படும் கோவிட்-19 தடுப்பு மருந்துகளில் ஒன்றான மாடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து, முதன் முதலாக பிரிட்டனிலும், தென்னாப்பிரிக்காவிலும் கண்டு பிடிக்கப் பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ்களையும் நடுநிலைப் படுத்துவதாக அந்நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்த மாடர்னா நிறுவனத்தின் இரு டோசேஜ்களையும் எடுத்துக் கொள்ளும் மக்களுக்கு அது கோவிட்-19 வைரஸ் பரவலுக்கு எதிரான மிக அதிகளவு பாதுகாப்பை வழங்குவதாகவும் அந்நிறுவனம் உறுதிப் படுத்தியுள்ளது. முன்னையதை விட மிக வேகமாகப் பரவக் கூடியது என்று பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா வைரஸின் உருமாறிய வடிவம் தற்போது 45 இற்கும் அதிகமான நாடுகளில் இனம் காணப் பட்டுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட உருமாறிய வடிவம் தற்போது 20 இற்கும் அதிகமான நாடுகளில் இனம் காணப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கோவிட்-19 பெரும் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் தொடர்பான விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்துவதற்காக சுமார் 15 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி ஒதுக்குவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அந்நிறுவனத்தின் நிர்வாகி சுந்தர் பிச்சை, இத்தடுப்பு மருந்துகள் எங்கு, எப்போது கிடைக்கின்றன என மக்களுக்குத் தகவல் வழங்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக கிராமங்களில் வசிக்கும் குடிமக்களுக்கு இந்தத் தடுப்பு மருந்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தத் திட்டம் செயற்படுத்தப் படவுள்ளது என சுந்தர் பிச்சை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 100 337 194
மொத்த உயிரிழப்புக்கள் : 2 151 233
குணமடைந்தவர்கள் : 72 387 626
ஆக்டிவ் தொற்றுக்கள் : 25 798 335
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 110 247

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 25 861 597 : மொத்த உயிரிழப்புக்கள் : 431 392
இந்தியா : 10 677 710 : 153 624
பிரேசில் : 8 872 964 : 217 712
ரஷ்யா : 3 756 931 : 70 482
பிரிட்டன் : 3 669 658 : 98 531
பிரான்ஸ் : 3 057 857 : 73 494
ஸ்பெயின் : 2 697 294 : 56 208
இத்தாலி : 2 475 372 : 85 881
துருக்கி : 2 435 247 : 25 210
ஜேர்மனி : 2 154 656 : 53 402
கொலம்பியா : 2 027 746 : 51 747
ஆர்ஜெண்டினா : 1 874 801 : 47 034
மெக்ஸிக்கோ : 1 771 740 : 150 273
தென்னாப்பிரிக்கா : 1 417 537 : 41 117
ஈரான் : 1 379 286 : 57 481
கனடா : 753 011 : 19 238
பாகிஸ்தான் : 535 914 : 11 376
சுவிட்சர்லாந்து : 513 599 : 9146
சீனா : 89 197 : 4636
இலங்கை : 59 167 : 287

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராகத் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை உருவாக்குவதற்கு அச்சாணியாகத் திகழ்ந்தவர் தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

ஐரோப்பிய ஆணையத்தால் வகுக்கப்படவுள்ள புதிய திட்டத்தில் டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் அறிமுகமாகவுள்ளது.

சுவிற்சர்லாந்தில் மார்ச் 5ம் திகதி நண்பகலில் ஒரு நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடித்து அமைதிகொள்ள சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் தலைவர் பார்மலின் அழைப்பு விடுத்துள்ளார்.