சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில் தற்போது இந்த வாரம் தென் சீனக் கடற்பரப்பில் இராணுவப் பயிற்சி நடவடிக்கையைத் தொடங்கவுள்ளதாக சீன அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
டொங்கின் வளைகுடாவில், லெயிஷௌ தீபகற்பத்துக்கு மேற்கே தென்மேற்கு சீனாவில் இந்த இராணுவப் பயிற்சி நடைபெறும் என அறிவிக்கப் பட்ட போதும், எப்போது இது தொடங்கும் என்றோ எந்த அளவுகோலில் நடைபெறும் என்பது போன்ற தகவல்களை சீன அரசு வெளியிடவில்லை.
கிட்டத்தட்ட சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலின் முழுப்பரப்பையுமே சீனா சொந்தம் கொண்டாடுவதால் கடந்த சில வருடங்களாக அங்கு அமெரிக்க இராணுவத்தின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரித்து வந்துள்ளன. இது வருடாந்தம் சுமார் டிரில்லியன் டாலர்கள் வணிகம் நடைபெற்று வரும் இப்பகுதியின் அமைதியையும், ஸ்திரத் தன்மையையும் குறைக்கும் செயல் என சீனா குற்றம் சாட்டி வருகின்றது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்