ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆனால் இது குறித்து யாரும் பெரிதாக கருத்துத் தெரிவிக்கவில்லை. சமீப காலமாக அமெரிக்காவில் புதிய அதிபராகப் பதவியேற்ற எவரும் , பதவியேற்பு விழாவில் சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப் பட்ட கடிகாரத்தை அணியவில்லை. மாறாக அமெரிக்காவில் தயாரிக்கப் பட்ட உள்ளூர் கடிகாரங்களையே அணிந்திருந்தனர். மேலும் கடிகாரத் தயாரிப்பு தொழில் துறையை அமெரிக்காவில் முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் அதிபர் பைடெனும் ஏன் சுவிஸ் றோலெக்ஸை அணிந்திருந்தார் என்பதே பலரது வியப்புக்குக் காரணமாகியுள்ளது.
அமெரிக்காவின் முன்னால் அதிபர்களில் டுவைட் எயிசென்ஹோவெர், லிண்டன் பி ஜோன்சன் மற்றும் றொனால்டு ரீகன் ஆகியோரும் தமது பதவியேற்பு விழாவில் றோலெக்ஸ் கடிகாரத்தைத் தான் அணிந்திருந்தனர். ஆனால் அதிபர் பில் கிளிண்டன் முதல் பதவியேற்ற யாருமே உள்ளூரில் தயாரிக்கப் பட்ட கடிகாரத்தைத் தான் அணிந்திருந்தனர்.
அதிலும் முன்னால் அதிபர் ஜோர்ஜ் W புஷ் பதவியேற்பு விழாவில் அணிந்திருந்த டிமெக்ஸ் மாடலானது $50 டாலர்களுக்கும் குறைவானது என்பது ஆச்சரியத்துக்குரியதே ஆகும்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்