உலகம்

சுவிற்சர்லாந்தில் மார்ச் 5ம் திகதி நண்பகலில் ஒரு நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடித்து அமைதிகொள்ள சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் தலைவர் பார்மலின் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் சுவிற்சர்லாந்தில் உயிரிழந்த 9,300 மக்களை நினைவுகூருவதற்காக, மார்ச் 5 ம் திகதி நண்பகலில் ஒரு நிமிடம் மௌனம் கடைப்பிடிக்குமாறு கூட்டமைப்பின் தலைவர் கை பார்மலின்தேசிய தொலைக்காட்சியின் பிரெஞ்சு ( ஆர்.டி.எஸ் ) மாலை செய்திக்கு அளித்த பேட்டியில்தெரிவித்துள்ளார்.

" குறித்த நினைவு விழாவை ஏற்பாடு செய்யஇது சரியான நேரம் அல்ல, குறிப்பாக தொற்றுநோயியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, அரசாங்கம் விரும்பவில்லை. " ஆனால் சுவிற்சர்லாந்தில் பதிவுசெய்யப்பட்ட கொரோனா வைரஸ் முதல் இறப்பின் ஒரு வருடம் கழித்து, வரும் வெள்ளிக்கிழமை நீங்கள், நமது நாட்டில் பேரிடரில் பலியான 9,300 நினைவில் இருக்குமாறு கேட்டுள்ளார்.

"நோய்வாய்ப்பட்ட அல்லது நேசித்தவரை இழந்த ஒருவரை அனைவருக்கும் தெரியும், இந்த தொற்றுநோயின் வலி தெரியும்" என அவர் மேலும் கூறினார். இது தொடர்பான அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் விரைவில் வெளியாகும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.