உலகம்

ஐரோப்பிய ஆணையத்தால் வகுக்கப்படவுள்ள புதிய திட்டத்தில் டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் அறிமுகமாகவுள்ளது.

வரும் கோடையில் ஐரோப்பியர்கள் இந்த டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட்டுடன் மிகவும் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கப்படலாம் எனவும் அறியவருகிறது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இன்று திங்கட் கிழமை ஜேர்மன் சட்டத்துறையாளர்களுக்கு ஆற்றிய உரையில் இந்த "டிஜிட்டல் கிரீன் பாஸ்" திட்டத்தை அறிவித்துள்ளார்.

அதன் பின்னர் ட்விட்டர் குறிப்பில் மேலும் சில விவரங்களைப் பகிர்ந்தார். இந்த "டிஜிட்டல் கிரீன் பாஸ்" திட்டத்தின் மூலம், ஒரு நபர் தடுப்பூசி பெற்றதற்கான சான்று, இதுவரை தடுப்பூசி போடாவிடின், வைரஸ் தொற்று சோதனை முடிவுகள், கோவிட் -19 தொற்றுக்கு ஆளாகி, மீட்டிருந்தால் அது குறித்த தகவல்களும் இதில் அடங்கும்.

சுவிற்சர்லாந்து மார்ச் 5 ம் திகதி ஒரு நிமிடம் அமைதியாகும் !

" இந்தத் திட்டத்தின் மூலம், படிப்படியாக ஐரோப்பிய ஒன்றியத்திலோ அல்லது வெளிநாட்டிலோ வேலை அல்லது சுற்றுலாவுக்கோ ஐரோப்பியர்கள் பாதுகாப்பாக செல்வதற்கு உதவுவதே இதன் நோக்கம்" என்று வான் டெர் லேயன் தனது ட்வீட் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் தரவு பாதுகாப்பு, மற்றும் தனியுரிமையை மதிக்கக் கூடிய வகையில், இந்தத் திட்டத்தை ஆணையம் சட்டமன்ற முன்மொழிவாக முன்வைக்கும் எனவும் அவர் வான் டெர் லேயன் கூறியுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.