உலகம்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெரும் முயற்சி காரணமாக சுயெஸ் கால்வாயை அடைத்துக் கொண்டு உலகளவில் மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவாறு தரை தட்டியிருந்த எவர்கிவன் சரக்குக் கப்பல் ஓரளவு விடுவிக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் இக்கப்பல் மிதக்கும் தருவாய்க்கு வந்திருப்பதாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் இன்ச் கேப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஞாயிறு நடைபெற்ற மீட்புப் பணியின் போது கப்பல் தரை தட்டியிருக்கும் முனைகளில் சுமார்18 மீட்டர் ஆழத்துக்கு கரைகள் தோண்டப் பட்டு 27 000 கியூபிக் மீட்டர் அளவிலான மணலும் வெளியேற்றப் பட்டதாகத் தெரிய வருகின்றது. கடந்த வாரம் மார்ச் 23 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை சுயெஸ் கால்வாயின் வடக்கே ஏனைய கப்பல்கள் பயணிக்க முடியாத படி குறுக்கே இந்த இராட்சத எவர் கிவன் கொள்கலன் கப்பல் சிக்கிக் கொண்டது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ70 000 கோடி மதிப்பிலான கடல் வழிப் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இது உலக பங்கு சந்தையிலும், கச்சா எண்ணெய் விலையிலும் கடும் தாக்கம் செலுத்தியது.

இந்நிலையில் வெகு விரைவில் இக்கப்பல் மீட்கப் பட்டு சுயெஸ் கால்வாய் வழியான வர்த்தகம் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தக் கப்பல் மறுபடி மிதக்கும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டதை SCA என்ற சுயெஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா றாபியே ஊடகங்களுக்கு உறுதிப் படுத்தியதுடன் மீட்கும் பணி தொடர்பான காணொளிகளும் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.